sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பணியில் 3,500 ஆசிரியர்கள்

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பணியில் 3,500 ஆசிரியர்கள்

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பணியில் 3,500 ஆசிரியர்கள்


UPDATED : மே 05, 2025 12:00 AM

ADDED : மே 05, 2025 08:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 05, 2025 12:00 AM ADDED : மே 05, 2025 08:26 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:
கோவை மாவட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பணியில், 3,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில், 1,210 அரசு பள்ளிகள், 177 அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்படுகின்றன. ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், அரசு நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) ரவிச்சந்திரன் கூறியதாவது:


அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை முடித்த, 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை, அருகிலுள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்க, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் படிப்பை தொடர்வதற்கு, வீடு வீடாகச் சென்று, கேன்வாசிங் செய்யும் பணியில், 3,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சேவை, நலத்திட்டங்கள் மற்றும் உதவித்தொகை திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை, மக்களிடம் நேரில் விளக்கி, மாணவர் சேர்க்கையை ஊக்குவித்து வருகின்றனர்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us