ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டு ஆலோசனை முகாம்
ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டு ஆலோசனை முகாம்
UPDATED : ஏப் 25, 2024 12:00 AM
ADDED : ஏப் 25, 2024 10:29 AM

ஊட்டி :
ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டு ஆலோசனை முகாம் இன்று காலை ஜே.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரியில் நடக்கிறது.
மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆதிதிராவிடர் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்காக, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பயிலும் மாணவர்களுக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகள் மற்றும் அப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து வழிகாட்டு ஆலோசனை முகாம் நடக்கிறது.
ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் தன்னார்வ இயக்கங்களுடன் இணைந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும், மூன்று முகாம்கள் இம்மாதம், மூன்றாம் வாரத்தில் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, ஊட்டி எல்க்ஹில் பகுதியில் அமைந்துள்ள ஜே.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரியில், 25ம் தேதி, காலை, 10:00 மணிக்கு, வழிகாட்டி ஆலோசனை வழங்கப்பட உள்ளதால், மாணவர்கள் பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.