UPDATED : மே 30, 2024 12:00 AM
ADDED : மே 30, 2024 10:41 AM
ஈரோடு:
கோடை விடுமுறையில், தனியார் பள்ளிகளில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக, விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு என்ற பெயரில், மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து செல்ல அறிவுறுத்தி இருப்பதற்கு பெற்றோர் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இதுகுறித்து, மாவட்ட கல்வி அலுவலர் குமாரசாமி கூறியதாவது:
கடந்த இரு நாட்களில் நான்கு தனியார் பள்ளிகளுக்கு, புகாரின் அடிப்படையில் சென்று நேரில் ஆய்வு செய்தோம். பள்ளி திறக்கும் நாளுக்கு பின்னரே வகுப்புகள் துவங்க வேண்டும். விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளோம். முதன்மை கல்வி அலுவலர், பள்ளி கல்வி துறை இயக்குனரும் தொடர்ந்து இதையே அறிவுறுத்தி வருகின்றனர். இவ்வாறு கூறினார்.