சி.ஏ.,வில் சாதித்த பிரேமாவிற்கு பாராட்டு விழா ஏற்பாடு
சி.ஏ.,வில் சாதித்த பிரேமாவிற்கு பாராட்டு விழா ஏற்பாடு
UPDATED : பிப் 07, 2013 12:00 AM
ADDED : பிப் 07, 2013 08:06 AM
அ நிறம் | அளவு
சங்கராபுரம்: தேசிய அளவில், சி.ஏ,.தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று, சாதனை படைத்த பிரேமாவிற்கு, பாராட்டு விழா நடத்த, சொந்த கிராம மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அடுத்த, பெரிய,கொள்ளியூரைச் சேர்ந்த ஜெயகுமார் மகள் பிரேமா. பி.காம்., முடித்த இவர், இந்தாண்டு, சி.ஏ., தேர்வில், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து, சாதனை படைத்தார்.
தேர்வில் சாதனை படைத்து, பெரியகொள்ளியூருக்கு பெருமை சேர்த்த பிரேமாவிற்கு, பாராட்டு விழா நடத்த, சொந்த கிராம மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். பிரேமாவை பாராட்டி, பெரிய கொள்ளியூர் பொதுமக்கள் சார்பில், சங்கராபுரம், பகண்டை கூட்ரோடு, அத்தியூர், கொள்ளியூர் ஆகிய இடங்களில், விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
