தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சீன மொழி கற்க பாகிஸ்தான் மாணவர்கள் ஆர்வம்

சீன மொழி கற்க பாகிஸ்தான் மாணவர்கள் ஆர்வம்

சீன மொழி கற்க பாகிஸ்தான் மாணவர்கள் ஆர்வம்


UPDATED : மார் 09, 2013 12:00 AM

ADDED : மார் 09, 2013 08:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 09, 2013 12:00 AM ADDED : மார் 09, 2013 08:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இஸ்லாமாபாத்: கல்வி, வேலைவாய்ப்பு காரணமாக, சீன மொழி கற்க, பாகிஸ்தான் மாணவர்கள், ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்தியா, பாகிஸ்தானில் உள்ள மாணவர்கள், பொதுவாக, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில், படிக்க விரும்புவர். எனினும், பொருளாதார வசதி கொண்டவர்களுக்கே, அந்த கனவு நனவாகும். அந்நாடுகளில், கல்வி கட்டணம் அதிகம் என்பதோடு, விசா போன்ற நடைமுறைகளும், அதிக செலவு பிடிப்பவை.

ரஷ்யா போன்ற நாடுகளில், கல்வி தொடர்பான தேர்வுகளுடன், அந்தந்த நாட்டு மொழிகளையும் கற்பது அவசியம். இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டு மாணவர்கள், கல்வி பயிலவும், வேலை வாய்ப்பு தேடியும், அண்டை நாடான சீனாவுக்கு, செல்ல துவங்கியுள்ளனர்.

இதற்கு முக்கிய காரணம், சீனாவுக்கு செல்வதில், அதிக பணம் செலவாவதில்லை என்பது தான். மேலும், மேற்கத்திய நாடுகளை விட, சீனாவில், கல்வி கட்டணம் மிகக்குறைவு என்பதால், பாகிஸ்தானின், நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள், தங்கள் உயர்கல்விக்கு, சீனாவையே தேர்வு செய்கின்றனர்.

மேலும், பாகிஸ்தான் மாணவர்கள், தங்கள் நாட்டுக்கு வருவதை, சீனர்கள், பெரிதும் வரவேற்கின்றனர். "பாகிஸ்தானியர்கள் என்றாலே, அவர்கள் ஒசாமா பின்லேடன் மற்றும் தலிபான்களுடன் தொடர்புடையவர்கள் என, மேற்கத்திய நாடுகளை சேர்ந்த மக்கள் கருதும் நிலையில், சீனாவில் கிடைக்கும் வரவேற்பு, எங்களுக்கு உற்சாகம் தருகிறது" என, பாகிஸ்தான் மாணவர்கள், கூறுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us