தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பலத்த பாதுகாப்புடன் எஸ்.எஸ்.எல்.சி வினாத்தாள் நெல்லை வந்தது

பலத்த பாதுகாப்புடன் எஸ்.எஸ்.எல்.சி வினாத்தாள் நெல்லை வந்தது

பலத்த பாதுகாப்புடன் எஸ்.எஸ்.எல்.சி வினாத்தாள் நெல்லை வந்தது


UPDATED : மார் 20, 2013 12:00 AM

ADDED : மார் 20, 2013 07:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 20, 2013 12:00 AM ADDED : மார் 20, 2013 07:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் கடந்த 1ம் தேதி ஆரம்பமாகி தொடர்ந்து நடந்து வருகிறது. இத்தேர்வுகள் வரும் 27ம் தேதி முடிவடைகிறது. விரைவில் பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வுகள் வரும் 27ம் தேதி ஆரம்பமாகிறது. இதற்காக சென்னையில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள்கள் அனுப்பபட்டு வருகிறது.

நெல்லை மாவட்டத்தை பொறுத்த வரை பாளை கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளிக்கு நேற்று காலையில் வினாத்தாள்கள் கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து நெல்லை, சேரன் மகாதேவி மற்றும் தென்காசி கல்வி மாவட்டங்களில் குறிப்பிட்ட வினாத்தாள் பாதுகாப்பு மையங்களுக்கு வினாத்தாள்கள் கொண்டு செல்லப்பட்டன.

நெல்லை டவுன், பாளை, தென்காசி, பாவூர்சத்திரம், புளியங்குடி, ராதாபுரம், வள்ளியூர், சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களுக்கு இந்த வினாத்தாள்கள் கொண்டு செல்லப்பட்டன. தொடர்ந்து இந்த மையங்களுக்கு "சீல்" வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தை பொறுத்த வரை, சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் 7,217 மாணவர்கள், 7,612 மாணவிகள் உட்பட 14 ஆயிரத்து 829 பேரும், தென்காசி கல்வி மாவட்டத்தில் 7,214 மாணவர்கள், 7,222 மாணவிகள் உட்பட 14 ஆயிரத்து 436 பேரும், நெல்லை கல்வி மாவட்டத்தில் 8,799 மாணவர்கள், 6,758 மாணவிகள் உட்பட 15 ஆயிரத்து 557 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.

மாவட்டத்தில் மொத்தம் 23 ஆயிரத்து 230 மாணவர்கள், 21 ஆயிரத்து 592 மாணவிகள் உட்பட 423 பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 44 ஆயிரத்து 722 பேர் இத்தேர்வில் பங்கேற்கின்றனர்.

இத்தேர்வுகளை எழுத வசதியாக தென்காசி கஙல்வி மாவட்டத்திஙல் 41, சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் 48, நெல்லை கல்வி மாவட்டத்தில் 40 மையங்கள் உட்பட மொத்தம் 129 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் மாவட்டத்தில் பல்வேறு பிளஸ் 2 தேர்வு மையங்களில் பறக்கும் படையினர் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு இடைஞ்சல்களை செய்து வருவதாக புகார் கூறப்படுகிறது. மேலும், ஒரு சில பள்ளிகளில் தேர்வு எழுதும் பிளஸ் 1 மாணவர்கள் சிலரை பெயிலாக்குவோம் என ஆசிரிய, ஆசிரியைகள் மிரட்டியதால் பரிதவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கல்வித் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை மிரட்டுபவர்கள் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us