அண்ணாமலைப் பல்கலையில் மேலும் ஒரு அதிகாரி பொறுப்பேற்பு
அண்ணாமலைப் பல்கலையில் மேலும் ஒரு அதிகாரி பொறுப்பேற்பு
UPDATED : ஏப் 18, 2013 12:00 AM
ADDED : ஏப் 18, 2013 09:00 AM
அ நிறம் | அளவு
சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைகழகத்தில், கணக்கு அதிகாரி ஒருவர், நேற்று பொறுப்பேற்றார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில், நிர்வாக குளறுபடியால் அரசு சார்பில், நிர்வாக சிறப்பு அதிகாரியாக, ஷிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டார். பின், துணை நிர்வாக அதிகாரிகளாக, தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கிறிஸ்து ராஜ் ஆகியோர், கடந்த வாரமும்; முதன்மைக் கணக்கு அதிகாரியாக, ரவிச்சந்திரன், கணக்கு அதிகாரியாக சீனிவாசன், நேற்று முன்தினமும் பொறுப்பேற்றனர்.
இந்நிலையில், மேலும் ஒரு கணக்கு அதிகாரியாக, சேலம் கலெக்டர் நேர்முக உதவியாளர் (கணக்கு பிரிவு) சிவகுமார், நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.
