தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் நாளிதழ் இணைந்து நடத்தும் பன்னாட்டு கருத்தரங்கம்

தினமலர் நாளிதழ் இணைந்து நடத்தும் பன்னாட்டு கருத்தரங்கம்

தினமலர் நாளிதழ் இணைந்து நடத்தும் பன்னாட்டு கருத்தரங்கம்


UPDATED : ஜூலை 05, 2014 12:00 AM

ADDED : ஜூலை 05, 2014 12:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 05, 2014 12:00 AM ADDED : ஜூலை 05, 2014 12:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தினமலர் நாளிதழும், காஞ்சி ஸ்ரீசங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியும் இணைந்து, பயன்பாட்டியல் பார்வையில் தமிழ் இலக்கியங்களும், ஆவணங்களும் என்ற தலைப்பில், பன்னாட்டுக் கருத்தரங்கை, செப்., 25, 26ம் தேதிகளில் நடத்துகின்றன.

தமிழ் இலக்கியத்தால் ஏற்பட்டுள்ள பயன்பாட்டுத் தாக்கங்கள் எண்ணற்றவை. இதுகுறித்து, ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி தமிழ் மன்றம், செம்மூதாய் பதிப்பகம் ஆகியவற்றுடன் இணைந்து, இக்கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. தமிழ் இலக்கிய நுால்களின் பயன்பாடுகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளை, கருத்தரங்கில் அளிக்கலாம். ஆய்வுக் கட்டுரைகள், பாமினி எழுத்துருவில் தட்டச்சு செய்து, ஏ 4 தாளில், ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஆய்வு கட்டுரைகளுடன், அதன் குறுந்தகடையும் இணைத்து, சுய விலாசத்துடன், இம்மாதம், 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதோடு, உள்நாட்டு கட்டுரையாளர்கள், கட்டணமாக, 650 ரூபாயும், வெளிநாட்டு ஆய்வாளர்கள், 35 அமெரிக்க டாலரும் அனுப்ப வேண்டும். கட்டணத்தை, Principal, Sri Sangara Arts and Science College, Enathur, Kanchipuram என்ற முகவரிக்கு, வரைவோலையாக செலுத்த வேண்டும்.

கட்டுரையை, முனைவர் நாஞ்சில் நீல.மாதவன், ஒருங்கிணைப்பாளர், தமிழத் துறைத் தலைவர், ஸ்ரீசங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, ஏனாத்துார், காஞ்சிபுரம் - 631561 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.மேலும் விவரங்களுக்கு, 044-27264066, 94447 48233, 96002 46344 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us