தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இடவசதி குறைவால், மூட்டைகளில் முடங்கியிருக்கும் நூலக புத்தகங்கள்

இடவசதி குறைவால், மூட்டைகளில் முடங்கியிருக்கும் நூலக புத்தகங்கள்

இடவசதி குறைவால், மூட்டைகளில் முடங்கியிருக்கும் நூலக புத்தகங்கள்


UPDATED : ஜூலை 07, 2014 12:00 AM

ADDED : ஜூலை 07, 2014 01:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 07, 2014 12:00 AM ADDED : ஜூலை 07, 2014 01:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மணவாள நகர்: நுாலகத்தில் இடவசதி இல்லாததால், மூட்டை களில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

மணவாள நகர், அண்ணா தெருவில், மாவட்ட கிளை நுாலகம் இயங்கி வருகிறது. 1998ல் துவங்கப்பட்ட இந்த நுாலகம், 30 ஆயிரம் புத்தகங்களையும், 5,000க்கும் மேற்பட்ட வாசகர்களையும் கொண்டது. மேலும், இந்த நுாலகத்தில், 171 பேர் புரவலர்களாக உள்ளனர். மேலும், இந்த நுாலகத்தில், இணைய மையம் (இன்டர்நெட் பிரவுசிங் சென்டர்), தொலை நகல் (பேக்ஸ்) மற்றும் நகல் (ஜெராக்ஸ்) எடுக்கும் வசதி உள்ளது.

இங்கு, குடிமைப் பயிற்சி மையம், சிறுவர் பகுதி போன்றவையும் இயங்கி வருகின்றன. இந்த நுாலகத்தை, ஒரு நாளைக்கு 500க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நுாலகத்தில், போதிய இட வசதி இல்லாததால், 15 மூட்டைகளில், சுமார் 2,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வீணாகி வருகின்றன.

மேலும், இந்த நுாலகத்தை விரிவுபடுத்தும் நோக்கில், நுாலகக் கட்டடத்தின் மேல் பகுதியில் புதிய கட்டடம் கட்டுவதற்கு, சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து, 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், பொதுப்பணி துறையினர் ஆய்வு செய்ததில், நுாலக கட்டடத்தின் உறுதித்தன்மை குறைபாடு காரணமாக, மேல்தளம் அமைக்கும் பணி தடை செய்யப்பட்டது.

எனவே, நுாலகத்தை இடித்து விட்டு, மீண்டும் இதே இடத்தில், நவீன வசதிகளுடன் புதிய நுாலகம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நுாலக வாசகர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us