தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளிகள் அருகே வேகத்தடை அமைக்க கோரிக்கை

அரசு பள்ளிகள் அருகே வேகத்தடை அமைக்க கோரிக்கை

அரசு பள்ளிகள் அருகே வேகத்தடை அமைக்க கோரிக்கை


UPDATED : ஆக 07, 2014 12:00 AM

ADDED : ஆக 07, 2014 01:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 07, 2014 12:00 AM ADDED : ஆக 07, 2014 01:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமழிசை: பூந்தமல்லி - திருவள்ளூர் நெடுஞ்சாலையில், திருமழிசை அருகே, அரசு பள்ளிகள் அருகே, சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூந்தமல்லி - திருவள்ளூர் நெடுஞ்சாலையில், திருமழிசை அருகே, அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி என, அருகருகே இரு பள்ளிகள் அமைந்துள்ளன. இங்கு 1,400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளிகள் அருகே, நெடுஞ்சாலை அமைந்துள்ளதால், தினமும் திருத்தணி, திருப்பதி, திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பேருந்துகள், கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி நிறைந்த பகுதியாக இருப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், தற்போது இப்பகுதியில் அமைந்துள்ள ஏரியில், மணல் எடுக்கும் பணி நடந்து வருவதால், மணல் லாரிகள் அசுர வேகத்தில் சென்று வருகின்றன. எனவே, மாணவ, மாணவியரின் நலன் கருதி, நெடுஞ்சாலையில் உள்ள இரு பள்ளிகளின் அருகே, வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என, மாணவ, மாணவியரின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us