தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எத்திராஜ் கல்லூரியின் முதல்வர் நியமனத்தை ரத்துசெய்த உயர்நீதிமன்றம்

எத்திராஜ் கல்லூரியின் முதல்வர் நியமனத்தை ரத்துசெய்த உயர்நீதிமன்றம்

எத்திராஜ் கல்லூரியின் முதல்வர் நியமனத்தை ரத்துசெய்த உயர்நீதிமன்றம்


UPDATED : ஜன 11, 2015 12:00 AM

ADDED : ஜன 11, 2015 12:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 11, 2015 12:00 AM ADDED : ஜன 11, 2015 12:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை எழும்பூரில், எத்திராஜ் மகளிர் கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரியின் முதல்வர் பதவிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. கல்லுாரி முதல்வராக, டாக்டர் நிர்மலா என்பவர் நியமிக்கப்பட்டார்.

முதல்வர் தேர்வை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், அதே கல்லுாரியில் பணியாற்றும், டாக்டர் கிரிஜா சியாம்சுந்தர், டாக்டர் சாந்தி, டாக்டர் சித்ரா வெங்கடாச்சலம், டாக்டர் திலகவதி ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர்.

மனுவில், முதல்வராக நியமிக்கப்பட்டவரை விட, நாங்கள் அதிக தகுதி பெற்றுள்ளோம்; தேர்வுக் குழு அமைத்ததில், பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி.,யின் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. எனவே, தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, கூறப்பட்டது.

மனுவை, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் முத்துகுமாரசாமி, வழக்கறிஞர் அருள்மொழி ஆஜராகினர். நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பிறப்பித்த உத்தரவு: யு.ஜி.சி., விதிமுறைகளின் படி, முதல்வரை தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழு அமைக்கப்படவில்லை. தேர்வுக் குழு நியமனமே, சட்டப்படியாக இல்லாதபோது, அந்தக் குழுவின் தேர்வும் செல்லாதுதான்.

எனவே, கல்லுாரி முதல்வராக நிர்மலா தேர்வு செய்யப்பட்டது, ரத்து செய்யப்படுகிறது. யு.ஜி.சி., விதிமுறைகளின்படி, தேர்வுக்குழுவை நியமிக்க வேண்டும். தேர்வு நடைமுறையை, கல்லுாரி அறங்காவலர்கள் குழு பின்பற்ற வேண்டும்.

முதல்வர் தேர்வு நடவடிக்கையை, 12 வாரங்களில் முடிக்க வேண்டும். புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கும் வரை, டாக்டர் நிர்மலா, முதல்வராக பணியில் தொடரலாம். இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us