தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாவட்ட அளவிலான சப்-ஜூனியர் பாட்மின்டன் போட்டி

மாவட்ட அளவிலான சப்-ஜூனியர் பாட்மின்டன் போட்டி

மாவட்ட அளவிலான சப்-ஜூனியர் பாட்மின்டன் போட்டி


UPDATED : ஜன 28, 2015 12:00 AM

ADDED : ஜன 28, 2015 10:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 28, 2015 12:00 AM ADDED : ஜன 28, 2015 10:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: மாவட்ட அளவிலான சப்-ஜூனியர் பாட்மின்டன் போட்டியில், மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

திருப்பூர் மோகன்ஸ் பாட்மின்டன் அகாடமியில், மாவட்ட அளவிலான சப்-ஜூனியர் பாட்மின்டன் போட்டி நடந்தது. தமிழ்நாடு இறகுப்பந்து கழக துணை மோகன்குமார் மேற்பார்வையில், ஒற்றையர் பிரிவில் நடந்த போட்டியை, இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் துவக்கி வைத்தார்.

போட்டி முடிவு

9 வயதுக்கு உட்பட்டோர் மாணவர் பிரிவில், தக்ஷின் 2-0 என்ற செட் கணக்கில், ரிபினேஷை வீழ்த்தினார். 11 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், ரோகித்தை 2-0 என்ற செட் கணக்கில், அஸ்வந்த் ஹரீஷ் வென்றார். மாணவியர் பிரிவில், நேகாவுக்கு எதிரான போட்டியில், 2-0 என்ற செட் கணக்கில், சிவதாரிணி வெற்றி பெற்றார்.

13 வயதுக்கு உட்பட்டோர் மாணவர் பிரிவில், ஸ்ரீராமை, 2-1 என்ற செட் கணக்கில் சைலேஷ் தோற்கடித்தார். மாணவியர் பிரிவில், வசுந்தராவை 2-0 என்ற செட் கணக்கில் காயத்ரி வீழ்த்தினார். 15 வயதுக்கு உட்பட்டோர் மாணவர் பிரிவில், சுஜித்துக்கு எதிராக களமிறங்கிய நிதின், 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். மாணவியர் பிரிவில், சிவப்பிரியா 2-0 என்ற செட் கணக்கில் ரஷ்மிகாவை வென்றார்.

17 வயதுக்கு உட்பட்டோர் மாணவர் பிரிவில், யோகேஷ் 2-0 என்ற செட் கணக்கில் ஸ்ரீஹரியை வீழ்த்தினார். பதக்கம் பெறாதோர் பிரிவில், ஸ்ரீஹரியை எதிர்த்து விளையாடிய நரேஷ் ஆஷர், 2-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us