பள்ளி மாணவியருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
பள்ளி மாணவியருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
UPDATED : ஜன 29, 2015 12:00 AM
ADDED : ஜன 29, 2015 03:03 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: முத்தியால்பேட்டை, சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சிறுபான்மையின மாணவியருக்கு, திறன் மேம்பாடு குறித்த பயிற்சி முகாம் நேற்று காலை நடந்தது.
ஆறாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவிகள் பங்கேற்ற முகாமில், ஆசிரியை நிர்மலா வரவேற்றார். விரிவுரையாளர் முத்து, தலைமை தாங்கினார். முத்தியால்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் புவனேஸ்வரி, மன அழுத்தம், உணர்வுகளை சரியான முறையில் கையாளுதல் குறித்தும், சுய விழிப்புணர்விற்கு தேவையான நெறிமுறைகள் குறித்து, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் பேசினார்.
