பாதுகாப்பற்ற நிலையில் ஊராட்சி ஒன்றிய அங்கன்வாடி மையம்
பாதுகாப்பற்ற நிலையில் ஊராட்சி ஒன்றிய அங்கன்வாடி மையம்
UPDATED : பிப் 25, 2015 12:00 AM
ADDED : பிப் 25, 2015 12:37 PM
அ நிறம் | அளவு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில், மண்டபம் ஊராட்சி ஒன்றிய அங்கன்வாடி மையம் உள்ளது.
இம்மையத்தை சுற்றி அடர்ந்து வளர்ந்துள்ள கருவேல மரங்கள் பாம்பு, விஷ வண்டுகளின் புகலிடமாக உள்ளது. இதனால், மழை காலத்தில் இம்மையத்திற்குள் பாம்புகள் புகுந்து விடுகின்றன. இம்மையத்திற்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர்.
இதுகுறித்து மண்டபம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பொதுமக்கள் முறையிட்டும் பலனில்லை. குழந்தைகள் நலன் கருதி, கருவேல மரங்களை அகற்றிட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
