தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ராமகிருஷ்ணா கல்லுாரிக்கு நாக் ஏ மதிப்பீடு அந்தஸ்து

ராமகிருஷ்ணா கல்லுாரிக்கு நாக் ஏ மதிப்பீடு அந்தஸ்து

ராமகிருஷ்ணா கல்லுாரிக்கு நாக் ஏ மதிப்பீடு அந்தஸ்து


UPDATED : டிச 07, 2015 12:00 AM

ADDED : டிச 07, 2015 03:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 07, 2015 12:00 AM ADDED : டிச 07, 2015 03:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை
:
 ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரிக்கு, தேசிய தர மதிப்பீடு மற்றும் நிர்ணய அமைப்பின், ஏ மதிப்பீடு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. 

ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரியில் சண்டிகரிலுள்ள தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கான தேசிய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் பூனியா தலைமையில் மூவர் அடங்கிய தேசிய தர மதிப்பீடு மற்றும் நிர்ணய அமைப்பு(நாக்) ஆய்வு செய்தது. நாக் செயல் குழுவின், 99வது சந்திப்பில்

நாட்டிலுள்ள, 91 கல்லுாரிகளுக்கு முதல் சுழற்சியில் முடிவுகள் வெளியிடப்பட்டன. ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி உட்பட 10 கல்லுாரிகளுக்கு ஏ மதிப்பீடு வழங்கப்பட்டது. எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் மற்றும் கல்லுாரி முதல்வர் ஜோசப் சேவியர் ஆகியோர் தரச்சான்று அறிக்கையை பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us