தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புத்தக சுமையை குறைக்க சி.பி.எஸ்.இ., புது உத்தரவு

புத்தக சுமையை குறைக்க சி.பி.எஸ்.இ., புது உத்தரவு

புத்தக சுமையை குறைக்க சி.பி.எஸ்.இ., புது உத்தரவு


UPDATED : ஏப் 22, 2016 12:00 AM

ADDED : ஏப் 22, 2016 10:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 22, 2016 12:00 AM ADDED : ஏப் 22, 2016 10:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இது தொடர்பாக சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

  • இரண்டாம் வகுப்பு வரை, புத்தகங்களை பள்ளியிலேயே வைத்திருக்க வேண்டும்
  • மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், அதிக எடையுள்ள குறிப்பு புத்தகங்கள் கொண்டு வருவதை தடுக்க வேண்டும்
  • கால அட்டவணைக்கு ஏற்ப, அதற்குண்டானபுத்தகங்களை மட்டுமே எடுத்து வருவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்
  • பாடத்திட்டங்கள், கலந்துரையாடும் வகையிலும், மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையிலும் எளிமையானதாக இருக்க வேண்டும்
  • வீட்டுப் பாடங்களை ஆண்டு முழுவதுக்கும் பகிர்ந்து, பரவலாக்க வேண்டும்; திணிக்கக் கூடாது
  • பாடத்திட்டத்துடன் சேர்ந்த மற்ற நடவடிக்கைகளை, தினமும் நடத்த வேண்டும்; இதன் மூலம் புத்தகச் சுமை குறையும்
  • பாடச் சுமையைக் குறைப்பது குறித்தும், மாணவர்களுக்கு வலியை ஏற்படுத்தாத பைகள் கொண்டு வருவது குறித்தும் பெற்றோருடனும் பள்ளி நிர்வாகம் ஆலோசிக்க வேண்டும்
  • புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்களுக்கு, எளிதில் மக்காத உறைகளை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்
  • வகுப்பறையில், குறிப்பு புத்தகங்கள், சீருடை, விளையாட்டு உபகரணங்களை மாணவர்கள் வைத்திருக்க வசதி செய்ய வேண்டும்.

இது போன்று பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை நடைமுறைபடுத்துவதை, பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு அறிவிப்பாணையில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us