UPDATED : ஏப் 22, 2016 12:00 AM
ADDED : ஏப் 22, 2016 10:48 AM
திருப்பூர்
:
பதியம் இலக்கிய அமைப்பு சார்பில், மூன்று கவிதை நூல்கள் அறிமுக விழா,
24ல், திருப்பூரில்
நடைபெற உள்ளது.
திருப்பூர்
பல்லடம் ரோடு, அகத்தியன் வளாகத்தில், அன்று மாலை, 6:00 மணிக்கு நடக்கும் இவ்விழாவுக்கு,
முன்னாள் தலைமை ஆசிரியர் ராமசாமி தலைமை
வகிக்கிறார். கவிஞர் ரகு வரவேற்கிறார். கவிஞர் ரமேஷ்குமார் மொழி பெயர்த்த, இந்தி கவிஞர் அக்னிசேகரின் என் நூறு கிராமங்களின் பெயரை,
இரவோடு இரவாக மாற்றி விட்டனர் என்ற கவிதை நூலை அறிமுகப்படுத்தி, எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் பேசுகிறார்.
கவிஞர் சிவ
விஜயபாரதி எழுதிய வெள்ளக் காக்கா மல்லாக்க பறக்குது கவிதை நூலை
அறிமுகப்படுத்தி, பேராசிரியர் திலீப்குமார்;
கவிஞர் பாலா எழுதிய முனியமரம் என்ற கவிதை நூலை அறிமுகப்படுத்தி, கவிஞர் மோகன்ராசு பேசுகின்றனர். வாசிப்பு ரசனை என்ற தலைப்பில், கவிஞர் மலர்கள் ராஜூ பேசுகிறார். கவிதை வாசிப்பு நடைபெறுகிறது. ஏற்பாட்டை, பதியம் இலக்கிய அமைப்பாளர் பாரதிவாசன் செய்து வருகிறார்.
