தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி நிர்வாகி, ஆசிரியை முன்ஜாமின் மனு தள்ளிவைப்பு

பள்ளி நிர்வாகி, ஆசிரியை முன்ஜாமின் மனு தள்ளிவைப்பு

பள்ளி நிர்வாகி, ஆசிரியை முன்ஜாமின் மனு தள்ளிவைப்பு


UPDATED : ஜூன் 26, 2021 12:00 AM

ADDED : ஜூன் 26, 2021 07:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 26, 2021 12:00 AM ADDED : ஜூன் 26, 2021 07:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா நிர்வகிக்கும் பள்ளியின் ஆசிரியை, நிர்வாகி உள்ளிட்டோரின் முன்ஜாமின் மனுக்களுக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசார் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகில் &'சுஷில் ஹரி&' என்ற பெயரில், சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளி உள்ளது. இப்பள்ளியை சிவசங்கர் பாபா நிறுவினார். பாலியல் தொல்லை கொடுத்ததாக, இவருக்கு எதிராக மூன்று மாணவியர் புகார் அளித்தனர்.
இதையடுத்து, பள்ளி நிறுவனரான சிவசங்கர் பாபா உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக, &'போக்சோ&' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில், அவர் கைது செய்யப்பட்டார். மாணவியரை மூளைச் சலவை செய்ததாக, அவரது சிஷ்யை சுஷ்மிதா என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இப்பள்ளி ஆசிரியை தீபா என்பவர் முன்ஜாமின் கோரி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், &'எனக்கு எதிராக மாணவியர் புகார் அளித்ததாகவும், வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. &'எனக்கு எதிரான குற்றச் சாட்டில் உண்மையில்லை&' என, கூறியுள்ளார். பள்ளி நிர்வாகி ஜானகி, அவரது மருமகள் பாரதி ஆகியோரும், முன்ஜாமின் கோரி மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இம்மனுக்கள், நீதிபதி தண்டபாணி முன், விசாரணைக்கு வந்தன. மனுக்களுக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 1க்கு, நீதிபதி தண்டபாணி தள்ளி வைத்தார்.பாலியல் புகாரில் சிக்கிய, பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபாவை, சி.பி.சி.ஐ.டி., காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு, இன்று விசாரணைக்கு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us