தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உலக பொருளாதாரத்தில் வேகமாக வளரும் இந்தியா: கவர்னர்

உலக பொருளாதாரத்தில் வேகமாக வளரும் இந்தியா: கவர்னர்

உலக பொருளாதாரத்தில் வேகமாக வளரும் இந்தியா: கவர்னர்


UPDATED : ஆக 06, 2023 12:00 AM

ADDED : ஆக 06, 2023 06:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2023 12:00 AM ADDED : ஆக 06, 2023 06:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
உலக பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடாக இந்தியா திகழ்கிறது என சென்னை பல்கலை., பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என். ரவி பேசுகையில் குறிப்பிட்டார்.சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், கவர்னர் ஆர்.என். ரவி, அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.முன்னாள் மாணவன்!
நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது:
இந்தியாவில் தலை சிறந்த பல்கலை.,களில் 21 தமிழகத்தில் உள்ளது. முத்துலட்சுமி ரெட்டி உள்ளிட்ட பல பெண் ஆளுமைகளை சென்னை பல்கலை, வழங்கி உள்ளது. நானும் சென்னை பல்கலைக்கழகத்தில் படித்தவன் தான். இந்தியாவின் தலைசிறந்த 100 பல்கலைக்கழங்களில் 21 தமிழகத்தில் உள்ளன. மாணவர்கள் ஒரு பட்டத்தோடு நிறுத்திவிடாமல் தொடர்ந்து படிக்க வேண்டும். வேலைக்கு சென்றதும், தொடர்ந்து மேலும் மேலும் படியுங்கள். பட்டமளிப்பு விழாவிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தந்தது பல்கலைக்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு திமுக போட்ட விதை தான் இன்று தமிழகம் சிறந்து விளங்க காரணம். தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை வடிவமைப்பதில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது. மாணவர்கள் வாழ்விலும் வெற்றி பெற வேண்டும் என்பதால் தான் நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.கனவு பெரியதாக இருக்கணும்!
கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:
உலக பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடாக இந்தியா திகழ்கிறது. மாணவர்களின் கனவு பெரியதாக இருக்க வேண்டும். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியா மறுமலர்ச்சி அடையும் தருணத்தில் நீங்கள் பட்டம் பெறுவது உங்கள் அதிர்ஷ்டம். வாழ்க தமிழ், வாழ்க பாரதம் எனக்கூறி தனது உரையை கவர்னர் நிறைவு செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us