தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒருநாள் முன்னதாகவே சுதந்திர தின விழா:பெற்றோர் அதிர்ச்சி

ஒருநாள் முன்னதாகவே சுதந்திர தின விழா:பெற்றோர் அதிர்ச்சி

ஒருநாள் முன்னதாகவே சுதந்திர தின விழா:பெற்றோர் அதிர்ச்சி


UPDATED : ஆக 15, 2023 12:00 AM

ADDED : ஆக 15, 2023 10:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 15, 2023 12:00 AM ADDED : ஆக 15, 2023 10:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ப.வேலுார்:
அரசியல் கட்சி நிர்வாகிகளுக்காக, ஒருநாள் முன்னதாக, நேற்று, பொத்தனுார் அரசு பள்ளியில், 76வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டதால், பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே பொத்தனுார், வெங்கமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 1 முதல், 8ம் வகுப்பு வரை, 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியில் நேற்று, 76வது சுதந்திர தினம், ஒருநாள் முன்னதாக தேசியக்கொடி ஏற்றி, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் மாலதி முன்னிலை வகித்தார். சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில், சிறப்பு விருந்தினராக, ப.வேலுார் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சேகர், பொத்தனுார் முன்னாள் டவுன் பஞ்., தலைவர் நாராயணன் பங்கேற்றனர்.பெற்றோர் கூறியதாவது:
அரசு பள்ளியில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடுவது மகிழ்ச்சி தான். ஆனால், ஆசிரியர்கள் விருப்பப்படி, ஒருநாள் முன்னதாக கொடியேற்றி கொண்டாடுவது மரபல்ல. மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக ஆசிரியர்கள் திகழ வேண்டும். மாணவர்கள் மனதில் தேச பக்தியை வளர்க்க வேண்டும். வரும் காலங்களில் ஒருநாள் முன்னதாக கொண்டாடுவது தடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சேகரை வைத்து இன்று விழா கொண்டாடப்பட்டது. நாளை தி.மு.க.,வை சேர்ந்த கபிலர் மலை ஒன்றிய சேர்மன் ரவி கொடியேற்றுவார். அவர் எல்லா பள்ளிகளிலும் கொடியேற்றி விட்டு இங்கு வரும்போது காலை, 11:00 மணி ஆகிவிடும். அதனால் பள்ளியில் கொடியேற்றம் மட்டுமே நடக்கும். எந்த கலை நிகழ்ச்சியும் கிடையாது. அதனால், ஒருநாள் முன்னதாக சுதந்திர தின விழா கொண்டாடினோம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us