நீட்டிற்காக தி.மு.க., கையெழுத்து பெறுவது நாடகம்: சீமான்
நீட்டிற்காக தி.மு.க., கையெழுத்து பெறுவது நாடகம்: சீமான்
UPDATED : அக் 25, 2023 12:00 AM
ADDED : அக் 25, 2023 08:19 AM
வானுார்:
தமிழகத்தில் நீட்டிற்கு எதிராக, கையெழுத்து இயக்கம் நடத்துவது, தி.மு.க.,வின் நாடகம் என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.விழுப்புரம் மாவட்டம் வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில், நாம் தமிழ் கட்சி கொடியேற்று விழாவில் பங்கேற்ற தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:
தமிழகத்தில் எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு காணப்பட்டதாக தெரியவில்லை. தமிழகத்தில் வரும், 2024 மற்றும், 2026ம் ஆண்டுக்கான தேர்தல்களம், நாம் தமிழர் கட்சிக்கானது. நாம் தமிழர் கட்சி வளர்ந்து வருகிறது. 55 ஆண்டு கால கட்சிகளுடன் எங்களை ஒப்பிடாதீர்கள்.பெண்களுக்கு, 33 சதவீதம் இன்னும் செயல்வடிவம் பெறவில்லை. பா.ஜ., முதலில் தங்களதுகட்சியில் பெண்களுக்கு, 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குமா?நீட் தேர்விற்கு எதிராக தி.மு.க., கையெழுத்து பெறுவது ஏமாற்று வேலை; வெறும் நாடகம் மற்றும் தேர்தலுக்கான அரசியல். மத்திய, மாநில அரசு இரண்டுமே மக்களுக்கான அரசு கிடையாது.ஒரே நாடு, ஒரே தேர்தல் என கூறிக்கொண்டு, பக்கத்து மாநிலத்திற்கு தண்ணீர் கொடுப்பதில்லை. ஜாதி வாரி கணக்கெடுப்பை மாநில அரசு தான் நடத்த வேண்டும். ஆனால், முதல்வர் எதற்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார் என்பது தெரியவில்லை.நடிகர் விஜயுடன் இணைந்து இயங்குகிறோம்; அவர் அரசியலுக்கு வர வேண்டும், கட்சி துவங்க வேண்டும், கொள்கைகளை சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
