UPDATED : நவ 10, 2023 12:00 AM
ADDED : நவ 10, 2023 09:51 AM
மாங்காடு:
மாங்காடு, குன்றத்துார் அருகே, அரசு பேருந்து படிக்கட்டில், ஆபத்தான முறையில் பயணம் செய்த மாணவர்களை தாக்கியதாகவும், பேருந்து ஊழியர்களை அவதுாறாக பேசியதாகவும், கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த துணை நடிகையும், பா.ஜ., பிரமுகருமான ரஞ்சனா நாச்சியார், 40 கைது செய்யப்பட்டார்.தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது. தினம் காலை, மாலை என இரு வேளைகளில், மாங்காடு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் தெரிவித்தது.அதன்படி, மாங்காடு காவல் நிலையத்தில், ரஞ்சனா நாச்சியார் நேற்று காலை ஆஜராகி கையெழுத்திட்டார். பின், அவரது இல்லத்தில், அவர் அளித்த பேட்டி:
பிக்பாஸ்சில் நடக்கும் கொடுமைகள் குறித்து, கருத்து கூற சொல்கின்றனர். அந்நிகழ்ச்சிக்காக நான் ஏன் குரல் கொடுக்க வேண்டும். இந்த நிகழ்வில், கமல், எனக்காக என்ன குரல் கொடுத்தார்.என் கைதுக்கு, நடிகர் சங்கம் குரல் கொடுக்கவில்லை. சக நடிகர், நடிகையர் யாரும் உடன் நிற்கவில்லை. மாணவர்களை தாக்கியதற்கு மன வருத்தப்படுகிறேன். பா.ஜ., நிர்வாகி என்பதால் கைதானேன். தமிழகத்தில், மூடிய கதவுகளுடன் கூடிய பேருந்துகளில் மாணவர்கள் பயணம் செய்வதை பார்ப்பீர்கள். அதற்கு, பா.ஜ., நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் தான் காரணம் என தெரியவரும்.இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.
