தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வங்கியாளர்களுக்கான நிதிசார் கல்வி தொடர்பான பயிற்சி வகுப்பு

வங்கியாளர்களுக்கான நிதிசார் கல்வி தொடர்பான பயிற்சி வகுப்பு

வங்கியாளர்களுக்கான நிதிசார் கல்வி தொடர்பான பயிற்சி வகுப்பு


UPDATED : டிச 20, 2023 12:00 AM

ADDED : டிச 20, 2023 09:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 20, 2023 12:00 AM ADDED : டிச 20, 2023 09:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் வங்கியாளர்களுக்கான நிதி உள்ளாக்கம் மற்றும் நிதிசார் கல்வி தொடர்பான ஒரு நாள் பயிற்சி நடந்தது.தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2023-2024 ஆம் ஆண்டிற்கு வங்கியாளர்களுக்கு நிதி உள்ளாக்கம் மற்றும் நிதிசார் கல்வி தொடர்பான பயிற்சி கள்ளக்குறிச்சி ஏ.கே.டி பொறியியல் கல்லுாரியில் நடந்தது.கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இதில் கள்ளக்குறிச்சி மற்றும் கல்வராயன்மலை வட்டாரம் என அனைத்து வங்கியாளர் களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் வங்கி மேலாண்மை மற்றும் பரிவர்த்தனை, புதிய வேலைகள், அதற்கான பயிற்சிகள் திட்டம் சார்ந்த விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் சுந்தரராஜன், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கவுரிசங்கர்ராவ், கள்ளக்குறிச்சி முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவி மேலாளர் சசிகுமார், உதவி திட்ட அலுவலர் ஆண்டாள் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிகள் அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us