பங்காரம் லஷ்மி கல்லுாரியில் இளந்தமிழர் இலக்கிய விழா
பங்காரம் லஷ்மி கல்லுாரியில் இளந்தமிழர் இலக்கிய விழா
UPDATED : பிப் 02, 2026 07:53 PM
ADDED : பிப் 02, 2026 07:54 PM
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லஷ்மி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தமிழ் துறை சார்பில் இளந்தமிழர் இலக்கிய விழா நடந்தது.
விழாவிற்கு கல்லுாரி தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குனர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவி ராஜலட்சுமி வரவேற்றார்.
விழாவில் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சார் பதிவாளர் மணிகண்டன் போட்டி தேர்வு எதிர்கொள்ளும் வழிமுறைகள் என்ற தலைப்பிலும், சென்னை ராமாபுரம் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக மொழி பயன்பாடு மற்றும் சமூகவியல் துறை உதவி பேராசிரியர் நாகம்மாள், எங்கள் வாழ்வும் வளமும் தமிழ் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர்.
இதில் கல்லுாரி முதல்வர்கள் பழனியம்மாள், பாஸ்கரன், துணை முதல்வர்கள் சக்திவேல், சசிகலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கல்லுாரி தமிழ் துறை உதவி பேராசிரியர்கள் பெரியசாமி, அனுசுயா ஆகியோர் அறிமுக உரையாற்றினர். நிகழ்ச்சியை மாணவி கனிமொழி தொகுத்து வழங்கினார். இதில் தமிழ்துறை பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். மாணவி அபிராமி நன்றி கூறினார்.

