sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

எஸ்.ஐ., தேர்விற்கு எதிரான வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

/

எஸ்.ஐ., தேர்விற்கு எதிரான வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

எஸ்.ஐ., தேர்விற்கு எதிரான வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு

எஸ்.ஐ., தேர்விற்கு எதிரான வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு


UPDATED : பிப் 26, 2026 02:54 PM

ADDED : பிப் 26, 2026 02:57 PM

Google News

UPDATED : பிப் 26, 2026 02:54 PM ADDED : பிப் 26, 2026 02:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:
எஸ்.ஐ., தேர்வை ரத்து செய்து புதிதாக தேர்வு நடத்த தாக்கலான வழக்கில் தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

தென்காசி குருசாமி உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனு:
எஸ்.ஐ., பணியிடங்களுக்கான தேர்வு 2025 டிச., 21ல் நடந்தது. பங்கேற்றோம். பிரிவு 'பி' பகுதியில் பாடத்திட்டத்தில் குறிப்பிட்டவாறு தமிழ் வினாக்கள் இடம்பெறவில்லை. பதிலாக உளவியல் பகுதியிலிருந்து 10 வினாக்கள் கூடுதலாக இடம்பெற்றன. இது ஏற்புடையதல்ல. எஸ்.ஐ., தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். தேர்வை ரத்து செய்து, புதிதாக நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.

நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.

அரசு தரப்பு:
தமிழ் தகுதி தேர்வில் 100 வினாக்கள் இடம்பெற்றன.

நீதிபதி:
தேர்வு பாடத்திட்டப்படி தமிழில் ஒரு வினா கூட இடம்பெறவில்லை. ஒரு மதிப்பெண் கூட தேர்வு முடிவை மாற்றலாம். தேர்வு முடிவுகளை 10 நாட்களுக்கு வெளியிட வேண்டாம்.

இவ்வாறு விவாதம் நடந்தது. நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.






      Dinamalar
      Follow us