தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போட்டித்தேர்வுக்கு வெள்ளிமலையில் இலவச பயிற்சி மையம் துவக்கம்

போட்டித்தேர்வுக்கு வெள்ளிமலையில் இலவச பயிற்சி மையம் துவக்கம்

போட்டித்தேர்வுக்கு வெள்ளிமலையில் இலவச பயிற்சி மையம் துவக்கம்


UPDATED : ஆக 14, 2026 05:16 PM

ADDED : ஆக 14, 2026 05:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 14, 2026 05:16 PM ADDED : ஆக 14, 2026 05:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி:
மத்திய, மாநில அரசு சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு மையம் வெள்ளிமலையில் துவங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக மத்திய, மாநில அரசு சார்பில் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த பயிற்சி வகுப்பில் பயின்று போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பலர் மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரிகின்றனர். கடந்த 1ம் தேதி நடந்த கோடை விழா நிகழ்ச்சியில் வெள்ளிமலையில் இலவச பயிற்சி வகுப்பு மையத்தை மாவட்ட பொறுப்பு அமைச்சர் வன்னியரசு துவக்கி வைத்தார்.

வெள்ளிமலை பஸ்நிலையத்திற்கு அருகில் உள்ள டாக்டர் அப்துல்கலாம் பயிலகத்தில் செயல்படும் இலவச பயிற்சி வகுப்பு மையத்தில், 2026ம் ஆண்டு நடைபெற உள்ளது டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 மற்றும் குரூப்-2 மற்றும் குரூப்-4 ஆகிய போட்டித்தேர்வுகளுக்கான வகுப்புகள் நடத்தப்படுகிறது.

கல்வராயன்மலையில் வசிக்கும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்று கிழமை தினங்களில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us