தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நம்ம ஸ்கூல் பவுண்டேஷனுக்கு ஒரே நாளில் ரூ.13.95 கோடி வசூல்

நம்ம ஸ்கூல் பவுண்டேஷனுக்கு ஒரே நாளில் ரூ.13.95 கோடி வசூல்

நம்ம ஸ்கூல் பவுண்டேஷனுக்கு ஒரே நாளில் ரூ.13.95 கோடி வசூல்


UPDATED : ஜூலை 12, 2023 12:00 AM

ADDED : ஜூலை 12, 2023 05:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 12, 2023 12:00 AM ADDED : ஜூலை 12, 2023 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
நம்ம ஸ்கூல் பவுண்டேஷனுடன், சி.ஐ.ஐ., இணைந்து, அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கான நிதி வழங்கும் விழா, நேற்று ரேடிசன் ப்ளூ ஓட்டலில் நடந்தது.தமிழகம் முழுக்க அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில், நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் கடந்தாண்டு, டிச., மாதம் துவங்கப்பட்டது.இத்திட்டத்தை துவக்கியபோது, 133 கார்ப்பரேட் நிறுவனங்கள், பள்ளிக்கல்வித்துறையுடன் கைகோர்த்தன. மொத்தம், 100 கோடி ரூபாய் செலவில், 7 ஆயிரத்து 294 பள்ளிகளுக்கு, பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,), நம்ம ஸ்கூல் பவுண்டேஷனுக்கு, நிதி வழங்கும் துவக்க விழா, நேற்று நடந்தது.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பேசுகையில், நம்ம ஸ்கூல் - நம்ம ஊரு பள்ளி இணையதளத்தில் இணைந்து, மாநிலம் முழுக்க, எந்த அரசுப்பள்ளிக்கும் தேவையான உதவியை செய்யலாம்.இந்த இணையதளத்தின் மூலம் பெறப்படும் உதவிகள், உரிய பள்ளிக்கு சென்றடைந்ததை அறியும் வசதி உள்ளது. இன்று (நேற்று) ஒரே நாளில் 13.95 கோடி ரூபாயை, தொழில் நிறுவனங்கள் வழங்கியுள்ளன. உயர்கல்வி நிறுவனங்களின் மையமாக கோவை இருப்பதால், பள்ளிக்கல்வி செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டியது அவசியம், என்றார்.விழாவில், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், சி.ஐ.ஐ., தமிழ்நாடு தலைவர் சங்கர் வாணவராயர், கோவை மண்டல தலைவர் செந்தில்கணேஷ், நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் தலைவர் வேணு சீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us