தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தீப்பற்றிய பள்ளி வேன்: உயிர் தப்பிய 18 மாணவர்கள்

தீப்பற்றிய பள்ளி வேன்: உயிர் தப்பிய 18 மாணவர்கள்

தீப்பற்றிய பள்ளி வேன்: உயிர் தப்பிய 18 மாணவர்கள்


UPDATED : அக் 27, 2023 12:00 AM

ADDED : அக் 28, 2023 06:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2023 12:00 AM ADDED : அக் 28, 2023 06:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை:
சிதம்பரம் அருகே, ஓடும்போது தனியார் பள்ளி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக மாணவர்கள் இறக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.கடலுார் மாவட்டம், சிதம்பரம் துணிசரமேடு பகுதியில் அத்தினா குளோபல் எனும் தனியார் பள்ளி வேன், பரங்கிப்பேட்டை, கரிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 18 மாணவர்களை அழைத்துக்கொண்டு, சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.பரங்கிப்பேட்டை கரிக்குப்பம் பகுதியை சேர்ந்த முருகன், 52; வேனை ஓட்டி சென்றார். காலை 8:45 மணியளவில், பு.முட்லுார் பைபாஸ் அருகே சென்றபோது, வேன் பேட்டரியில் இருந்த ஒயர் ஷாட்டாகி திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதிர்ச்சியடைந்த வேன் டிரைவர், வேனை சாலையோரம் நிறுத்தினார். வேனில் இருந்த மாணவர்கள் செய்வதறியாது அலறினர்.வேன் டிரைவர் மற்றும் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து வேனில் இருந்து மாணவர்களை கீழே இறக்கி காப்பாற்றினர். தகவலறிந்த, பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயக்குமார் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, தீயை அணைத்தனர். இருந்தும், வேன் முழுவதும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்தால், பைபாஸ் சாலையில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம், புவனகிரி தாசில்தார் சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்தனர். ஓடும் போது தனியார் பள்ளி வேன் தீப்பிடித்து எரிந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us