மெட்ரிக் இயக்குனர் வீடியோ கான்பரன்சிங்கில் கலந்துரையாடல்
மெட்ரிக் இயக்குனர் வீடியோ கான்பரன்சிங்கில் கலந்துரையாடல்
UPDATED : ஆக 28, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: சென்னையில் இருந்தபடி, மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனர் மணி, எஜூசாட் செயற்கைகோள் உதவியுடன் வீடியோ கான்பரன்சிங்கில் மாநிலம் முழுவதும் உள்ள மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுடன் கலந்துரையாடினார்.
கோவை ராஜவீதியில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள எஜூசாட் செயற்கைகோள் இணைப்பு உதவியுடன் வீடியோ கான்பரன்சிங் முறையில் 20 மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துரையாடினர்.
அப்போது, ‘பள்ளிகளை சிறப்பாக நடத்த வேண்டும்; பள்ளிகள் குறித்து எவ்வித புகாரும் வரக்கூடாது’ என்றார். இந்த கலந்துரையாடலில் கோவை மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் காளியண்ணன் பங்கேற்றார்.
மெட்ரிக் பள்ளிக்கல்வித்துறையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடல் நடப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

