தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்கு கார் பரிசளிப்பு

கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்கு கார் பரிசளிப்பு

கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்கு கார் பரிசளிப்பு


UPDATED : ஏப் 09, 2013 12:00 AM

ADDED : ஏப் 09, 2013 10:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 09, 2013 12:00 AM ADDED : ஏப் 09, 2013 10:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சிக்கு ஹூண்டாய் நிறுவனம் புதிய காரை பரிசாக வழங்கியுள்ளது.

விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லூரியில் ஆட்டோமொபைல் பாட பிரிவில் பயிலும் மாணவர்கள் தங்கள் படிக்கும் துறையில் பயிற்சி எடுக்க ஹூண்டாய் கார் நிறுவனம் ஐ-10 மாடல் காரை பரிசாக கல்லூரிக்கு வழங்கியது.

சென்னையில் ஹூண்டாய் பவுண்டேஷன் ஸ்ரீதர் புதிய காரை கல்வி குழும சேர்மன் டாக்டர் கவுதம சிகாமணியிடம் வழங்கினார். பின்னர் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் சேர்மன் டாக்டர் கவுதம சிகாமணி நிருபர்களிடம் கூறியதாவது:

ஹூண்டாய் கார் கம்பெனி முதன் முதலாக, கல்லூரி மாணவர்கள் தாங்கள் படிக்கும் ஆட்டோமொபைல் துறையில் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வசதியாக புதிய காரை கல்லூரிக்கு வழங்கியுள்ளது. மாணவர்கள் இந்த காரை பயன்படுத்தி மரபு சாரா எரிசக்தி, டீசலுக்கு மாற்றாக எரி பொருளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிக்கும், சூரிய சக்தி மூலம் காரை இயக்குதல் போன்ற ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளனர்.

மாணவர்களுக்கு உதவியாக துறை பேராசிரியர்கள் ஆலோசனை வழங்க உள்ளனர். மாணவர்கள் இந்த காரை பயன்படுத்தி துறையில் முன்னேற வாழ்த்துகிறேன். இவ்வாறு சேர்மன் டாக்டர் கவுதம சிகாமணி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us