தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ கவுன்சில் தலைவருக்கு எதிராக பிஸியோதெரபி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மருத்துவ கவுன்சில் தலைவருக்கு எதிராக பிஸியோதெரபி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மருத்துவ கவுன்சில் தலைவருக்கு எதிராக பிஸியோதெரபி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


UPDATED : ஏப் 09, 2013 12:00 AM

ADDED : ஏப் 09, 2013 10:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 09, 2013 12:00 AM ADDED : ஏப் 09, 2013 10:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சி: "பிஸியோதெரபிஸ்ட்களை, போலி டாக்டர்கள் என்று, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் பிரகாசம் கூறியதை வாபஸ் பெற வேண்டும்" என, வலியுறுத்தி, திருச்சியில் பிஸியோதெரபி கல்லூரி மாணவ, மாணவியர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி, மிளகுபாறை பகுதியில் உள்ள அரசு பிஸியோதெரபி கல்லூரி மாணவ, மாணவியர், நேற்று காலை முதல் திடீரென வகுப்புகளை புறக்கணித்து, கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிஸியோதெரபிஸ்ட்களை போலி மருத்துவர்கள் என்றும், டெக்னிஷியன்கள் என்றும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் பிரகாசம், கூறிய கருத்தை ஊடகங்கள் முன் வாபஸ் பெற வேண்டும். நான்கரை ஆண்டு இளநிலை படிப்பு மற்றும், இரண்டாண்டு முதுநிலை படிப்பு பயில்வதால், பிஸியோதெரபிஸ்ட்கள், டெக்னிசியன்கள் இல்லை. பிஸியோதெரபிஸ்ட்கள், சுய மருத்துவர்கள் என உலக சுகாதார அமைப்பு கூறியிருக்கும் போது, "மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் முன்னிலையில் தான், பிஸியோதெரபிஸ்ட்கள் சிகிச்சை அளிக்க வேண்டும்" என, பிரகாசம் கூறியது தவறான தகவலாகும்.

பிஸியோதெரபிஸ்ட் தங்களது பெயருக்கு முன்னாள் டாக்டர் என்றும், பெயருக்கு பின்னால், பி.டி., என்றும் போட்டுக் கொள்ள, உலக சுகாதார அமைப்பு மற்றும் உலக பிஸியோதெரபி கூட்டமைப்பு அங்கிகாரம் அளித்துள்ளது. இதை பின்பற்ற அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

மற்ற மாநிலங்களில் உள்ளது போல், தனியாக அரசின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் வகையில், "தமிழ்நாடு மாநில பிஸியோதெரபி குழு" அமைக்க வேண்டும். தமிழகம் முழுவதும், 170 பிஸியோதெரபிஸ்ட்கள் மட்டுமே அரசு பணியில் உள்ளனர். அதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள நரம்பியல், முடநீக்கியல், குழந்தைகள் நலம், தீக்காயம், சுவாசப் பிரிவு ஆகிய ஒவ்வொரு துறைகளிலும் முதுநிலை படிப்பு முடித்த ஒரு பிஸியோதெரபிஸ்ட்டும், இரண்டு இளநிலை படிப்பு முடித்த இரண்டு பிஸியோதெரபிஸ்ட்களும் நியமனம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கல்லூரி மாணவர் சங்க தலைவர் பரமேஸ்வரன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர். மாணவர்களிடம், திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் கார்த்திக்கேயன், சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், மாணவர்கள் சமரசத்தை ஏற்காமல் நேற்று மாலை வரை தொடர்ந்து போராடினர்.

இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் மாணவர்கள் முடிவு செய்துள்ளனர். கலெக்டர் ஜெயஸ்ரீயை நேற்று சந்தித்த மாணவர்கள், இதே கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us