UPDATED : ஜூலை 11, 2014 12:00 AM
ADDED : ஜூலை 11, 2014 02:54 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்காலில் பார்வை குறைபாடு உள்ள மாணவர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
காரைக்கால் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து, பார்வை குறைபாடு உள்ள மாணவர்களை கண்டறியும் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
காரைக்கால் முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் நடந்த முகாமில், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையைச் சார்ந்த குழுவினர் மற்றும் முகாம் ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி ஆகியோர், மாணவர்களுக்கு உள்ள பார்வை குறைபாட்டை கண்டறியும் வழிமுறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.
திட்ட ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து, கல்வி இணை ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
