UPDATED : ஆக 12, 2014 12:00 AM
ADDED : ஆக 12, 2014 01:02 PM
திருவொற்றியூர்: &'&'திருவொற்றியூர் அரசு கல்லுாரிக்கு புதிய கட்டடம் கட்டப்படும்" என எம்.எல்.ஏ., குப்பன் தெரிவித்தார்.
திருவொற்றியூரில், சென்னை பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கடந்த 2012ம் ஆண்டு துவக்கப்பட்டது. மூன்றாம் ஆண்டு துவக்க விழா மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா, கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
கல்லுாரி பேராசிரியை காஞ்சனமாலா வரவேற்றார். விழாவில், திருவொற்றியூர் எம்.எல்.ஏ., குப்பன் பேசுகையில், &'&'கல்லுாரிக்கு புதிய கட்டடம் கட்ட, 7.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தமும் இறுதி செய்யப்பட்டுவிட்டது. மூன்றாம் ஆண்டு இறுதியில் கல்லுாரிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு விடும்,&'&' என்றார்.
கல்லுாரி முதல்வர் பழனிச்சாமி பேசுகையில், &'&'கல்லுாரியில் 60 சதவீதம் மாணவியர் உள்ளனர். அறிவியல் பாடப்பிரிவுக்கு 2,575 ரூபாயும், மற்ற பாடப் பிரிவுகளுக்கு 2,075 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை அனைத்து மாணவ, மாணவியரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார். முன்னதாக, கல்லுாரியின் முதலாம் ஆண்டு மாணவ, மாணவியரை, இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவியர் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
