UPDATED : செப் 06, 2014 12:00 AM
ADDED : செப் 06, 2014 11:22 AM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் மாண்டிசோரி தின விழா கொண்டாடப்பட்டது.
நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் உஷாநந்தினி குத்துவிளக்கேற்றி துவக்கினார். பள்ளி முதல்வர்கள் இப்ராகீம் ஷெரீப், துணை முதல்வர் ஜோதிலிங்கம் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியை திலகா வரவேற்றார்.
மாண்டிசோரி கல்வி முறையை உலகிற்கு வழங்கிய மரியா மாண்டிசோரி குறித்து பள்ளி ஆசிரியைகள் மாதவி, அமுதா பேசினர். எல்.கே.ஜி., முதல் இரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாறுவேடம், நடனம், பாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.
