UPDATED : நவ 04, 2014 12:00 AM
ADDED : நவ 04, 2014 10:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி கல்வி மாவட்டத்தில் மத்திய அரசு நடத்தும், தேசிய திறனாய்வு முதல் நிலைத் தேர்வு நடந்தது.
9 ம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்ற, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பரமக்குடி ஆயிர வைசிய, உட்பட 4 இடங்களில், 1,500 க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினர். இதில் வெற்றிபெற்று, அடுத்த கட்ட தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, பி.எச்.டி., வரை படிப்பு செலவு முழுவதையும் மத்திய அரசு வழங்கும்.

