தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உயரம் தாண்டுதலில் சாதனைக்கு துடிக்கும் மாணவர்!

உயரம் தாண்டுதலில் சாதனைக்கு துடிக்கும் மாணவர்!

உயரம் தாண்டுதலில் சாதனைக்கு துடிக்கும் மாணவர்!


UPDATED : டிச 22, 2014 12:00 AM

ADDED : டிச 22, 2014 11:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 22, 2014 12:00 AM ADDED : டிச 22, 2014 11:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதே எனது லட்சியம் என, தேசிய உயரம் தாண்டுதல் போட்டிக்கு தேர்வான மாணவர் ஹர்ஷவர்தன் கூறினார்.

பெரியநாயக்கன்பாளையம் ஜி.கே.டி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஹர்ஷவர்தன்; மாநில அளவிலான உயரம் தாண்டுதல் போட்டியில் வெற்றிபெற்று, தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டார். அப்போட்டியில் எப்படியும் வெற்றி பெற்று விட வேண்டும் என, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

தனது விளையாட்டு ஆர்வம் குறித்து ஹர்ஷவர்தன் கூறியதாவது: பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் கோவையில் நடந்தது. அதில், உயரம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் பெற்றேன். நீலகிரி மாவட்டம் குன்னுாரில் உள்ள எம்.ஆர்.சி., விளையாட்டுத் திடலில் நடந்த, 14 வயதுக்குட்பட்ட உயரம் தாண்டுதல் போட்டியிலும் முதலிடம் பெற்றேன்.

தொடர்ந்து, மதுரை எம்.ஜி.ஆர்., விளையாட்டு மைதானத்தில் நடந்த தடகளப் போட்டியில் பங்கேற்று, உயரம் தாண்டுதலில் முதலிடம் பெற்றேன். இதனால், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டேன். வரும் ஜன., 17 முதல் 23 வரை ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்கிறேன். அதில், என் முழுத் திறமையை காட்டி பதக்கம் பெறுவேன். அதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பங்கேற்பதே எனது லட்சியம். இவ்வாறு ஹர்ஷவர்தன் கூறினார்.

இவர், இந்திய பள்ளி விளையாட்டு கழகம் சார்பில், மதுரை மாவட்டம் பரமகுடியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டியிலும் சிறப்பாக விளையாடினார். இதனால், ஆந்திர மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான கைப்பந்து போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us