மாணவர்களிடம் கலாசார ஊக்குவிப்பு; ஆசிரியர்களுக்கு பயிற்சி
மாணவர்களிடம் கலாசார ஊக்குவிப்பு; ஆசிரியர்களுக்கு பயிற்சி
UPDATED : அக் 13, 2015 12:00 AM
ADDED : அக் 13, 2015 11:01 AM
விழுப்புரம்
:
இந்திய கலாசாரங்களை பள்ளி மாணவர்களிடையே ஊக்குவிக்கும் கலா உற்சவ் திட்டம்
குறித்து ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம், விழுப்புரத்தில் நடந்தது.
இந்திய பாராம்பரிய கலாசாரங்கள் இசை, நாடகம், நடனம், ஓவியம் போன்றவை பள்ளி மாணவர்கள் மத்தியில் மறவாமல் இருப்பதற்காக, மத்திய அரசு கலா உற்சவ் என்ற திட்டத்தை துவங்கியுள்ளது. இதன் மூலம் அரசு பள்ளிகளில் இசை, நாடகம், நடனம், ஓவியம் ஆகியவற்றில் ஈடுபாடு உடைய 10 பேர் அடங்கிய மாணவர்கள் குழு, ஆசிரியர்கள் மூலம் தேர்வு செய்யப்படும். இந்த குழுவைச் சேர்ந்தவர்களுக்கு, முதற்கட்டமாக வட்ட அள வில் போட்டிகள் நடத்தப்படுகிறது.
அதில் வெற்றி பெறுவோர் மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும். தேசிய அளவில் முதல் பரிசாக 5 லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசாக 3 லட்சம் ரூபாய், மூன்றாம் பரிசு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை மாநில அரசு அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் மூலம் செயல்படுத்துகிறது. இத்திட்டத்தில் மாணவர்களை தேர்வு செய்யும் முறைகள் தொடர்பாக, விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், ஆசிரியர்களுக்கான முதற்கட்ட பயிற்சி நடந்தது.
இசை, நாடகம், நடனம், ஓவியம் சார்ந்த ஆசிரியர்கள், ஆசிரியைகள் பங்கேற்ற கூட்டத்திற்கு, சி.இ.ஓ., மார்ஸ் தலைமை தாங்கினார். ஆசிரியர்களுக்கு இடைநிலை கல்வி உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் பயிற்சி அளித்தார்.
