UPDATED : மார் 29, 2016 12:00 AM
ADDED : மார் 29, 2016 11:07 AM
கோவை
: டாக்டர்
என்.ஜி.பி., கலை அறிவியல்
கல்லுாரிக்கு &'ஏ&' கிரேடு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
டாக்டர் என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரியில், 23 இளங்கலை மற்றும், 14 முதுகலை படிப்புகளும், 9 ஆய்வியல் நிறைஞர், ஐந்து பிஎச்.டி., படிப்புகளும் வழங்கப்படுகின்றன. யு.ஜி.சி., பரிந்துரையின்படி, பாரதியார் பல்கலை, 2015ம் ஆண்டு, ஏப்., 29 முதல் இக்கல்லுாரிக்கு தன்னாட்சி தகுதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், தேசிய தரமதிப்பீடு மற்றும் அங்கீகார குழுவினர்(நாக்), கடந்த, 3 - 5ம் தேதி வரை கல்லுாரியில் ஆய்வு செய்தனர். குஜராத், ராஜ்கோட் சவுராஷ்டிரா பல்கலை துணைவேந்தர் பிரதாப்சிங் சவுகான் தலைமையில், நாக் குழு ஆய்வு செய்தது.
கல்லுாரி தரம், மாணவர்கள் தேர்ச்சி விகிதம், கற்றல் கற்பித்தல் விகிதம், ஆய்வுப் படிப்பு உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் ஆய்வு செய்து, நாக் குழுவினரின் ஒப்புதலின்படி, ஏ கிரேடு அந்தஸ்து கல்லுாரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
கல்லுாரி செயலாளர் தவமணிதேவி, கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி, முதன்மை செயல் அலுவலர் புவனேஸ்வரன் ஆகியோர், கல்லுாரி முதல்வர், பேராசிரியர்கள் உள்ளிட்டோருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
