தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரை காமராஜ் பல்கலையை புறக்கணிக்கிறாரா செயலர்?

மதுரை காமராஜ் பல்கலையை புறக்கணிக்கிறாரா செயலர்?

மதுரை காமராஜ் பல்கலையை புறக்கணிக்கிறாரா செயலர்?


UPDATED : மார் 29, 2016 12:00 AM

ADDED : மார் 29, 2016 12:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 29, 2016 12:00 AM ADDED : மார் 29, 2016 12:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை
: மதுரை காமராஜ் பல்கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை உயர்கல்வி செயலரும்
, கன்வீனர் கமிட்டி தலைவருமான அபூர்வா தொடர்ந்து புறக்கணிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இப்பல்கலை துணைவேந்தர் கல்யாணி பதவி காலம் முடிந்த பின், ஓராண்டுக்கும் மேல் அப்பணியிடம் காலியாக உள்ளது. புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் தேடல் குழுவில் இடம் பெற்ற உறுப்பினர் (செனட் பிரதிநிதி) ராஜினாமா செய்ததாலும், தேர்தல் நன்னடத்தை விதி அமலில் இருப்பதாலும், தேர்வு பணியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தலுக்கு பின் தான், புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் சூழ்நிலை உள்ளது. அதுவரை கன்வீனர் கமிட்டி தலைவர் தான் துணைவேந்தர் பொறுப்புக்களை கவனிப்பார். 

தொடர் புறக்கணிப்பா: 

கன்வீனர் கமிட்டி தலைவரான ஆபூர்வா சென்னையில் உள்ளதால், ஒவ்வொரு பைல்களிலும் அவரது கையெழுத்து பெற பல்கலை அலுவலர்கள் சென்னை செல்கின்றனர். 

சிண்டிகேட் உறுப்பினர் கூட்டத்தை கூட சென்னையில் தான் நடத்துகிறார். முக்கியமான முடிவுகள் மேற்கொள்ளும் கல்வி பேரவை கூட்டத்தை கூட நடத்த,அவர் பல்கலைக்கு வரவில்லை. கமிட்டி உறுப்பினர் வெங்கட்ராமன் தான் நடத்தினார்.

இதுகுறித்து பேராசிரியர்கள் சிலர் கூறியதாவது:

துணைவேந்தர் இல்லாத ஓராண்டில், பட்டமளிப்பு விழாவில் மட்டும் செயலர் பங்கேற்றார். கவர்னர் பங்கேற்றதால் அதை தவிர்க்க முடியவில்லை. காமராஜ் பல்கலைக்கு வருவதை அவர் தொடர்ந்து தவிர்க்கிறார். காரைக்குடி அழகப்பா, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை நிகழ்ச்சிக்கு மதுரை வழியாக தான் அடிக்கடி செல்கிறார். ஆனால் இப்பல்கலைக்கு வருவதில்லை.

நெல்லையில் பல்கலை சிண்டிகேட் கூட்டத்தில் பங்கேற்கும் அவர், இப்பல்கலை சிண்டிகேட் கூட்டத்தை சென்னையில் நடத்துகிறார். பல்கலை விதிப்படி, துணைவேந்தர் இல்லாத சமயம் கன்வீனர் கமிட்டி தலைவர் தான் கல்வி பேரவை கூட்டத்தை நடத்த வேண்டும். ஆனால் நேற்று நடந்த அந்த கூட்டத்திற்கும் அவர் வரவில்லை. தொடர்ந்து புறக்கணிப்பதன் மர்மம் தெரியவில்லை, என்றனர்.

பல்கலை வட்டாரங்கள் கூறுகையில், கல்விப் பேரவை கூட்டத்தில் செயலர் பங்கேற்பதாக தான் இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அவர் வராதது உறுதி செய்யப்பட்டது, என்றன.

54 சதவீத உறுப்பினர் ஆப்சென்ட்

கூட்டத்தில் மொத்தம் உள்ள 93 உறுப்பினர்களில் 50 பேர் பங்கேற்கவில்லை. பலர் கூட்டம் முடியும் நிலையில் பெயருக்கு பங்கேற்றனர். கவர்னரால் நியமிக்கப்பட்ட சிண்டிகேட் உறுப்பினர்கள் உட்பட சிலரும் வரவில்லை. கூட்டஅரங்கில் பெரும்பாலான சேர்கள் காலியாக கிடந்தன. கல்வி பேரவை முக்கியத்துவம் குறித்து பல்கலை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us