தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகள் திறப்பா? கல்வித் துறை விளக்கம்!

பள்ளிகள் திறப்பா? கல்வித் துறை விளக்கம்!

பள்ளிகள் திறப்பா? கல்வித் துறை விளக்கம்!


UPDATED : ஆக 07, 2020 12:00 AM

ADDED : ஆக 07, 2020 10:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 07, 2020 12:00 AM ADDED : ஆக 07, 2020 10:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
&'தமிழகத்தில், பள்ளிகளை திறப்பது குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்&' என, பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, ஆன்லைனில் மட்டும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி, &'டிவி&' மற்றும் பிற தனியார், &'டிவி&'க்கள் வழியே, &'வீடியோ&' பாடங்கள் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகள், பல்வேறு செயலிகள் வழியே, &'ஆன்லைன்&' வகுப்பை நடத்துகின்றன. இந்நிலையில், நவம்பரில் பள்ளிகளை திறக்கவும், காலாண்டு, அரையாண்டு தேர்வை ரத்து செய்யவும், பள்ளிக் கல்வித் துறை முடிவெடுத்துள்ளதாக, நேற்று தகவல்கள் பரவின.
இது தொடர்பாக, பள்ளி கல்வித் துறை அளித்துள்ள விளக்கம்:பள்ளிகளை திறப்பது குறித்து, அரசு இன்னும் உரிய முடிவு எடுக்கவில்லை. எனவே, இது தொடர்பாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். பள்ளிகள் திறப்பு குறித்து உரிய நேரத்தில் ஆலோசித்து, பொதுமக்களுக்கு முறையாக அறிவிக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us