தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ கல்லுாரிகள் கட்டணம் உயராது: கவர்னர்

மருத்துவ கல்லுாரிகள் கட்டணம் உயராது: கவர்னர்

மருத்துவ கல்லுாரிகள் கட்டணம் உயராது: கவர்னர்


UPDATED : ஜூன் 27, 2023 12:00 AM

ADDED : ஜூன் 27, 2023 09:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 27, 2023 12:00 AM ADDED : ஜூன் 27, 2023 09:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
தனியார் மருத்துவ கல்லுாரிகள் கட்டணங்களை உயர்த்த நான் ஒப்புக்கொள்ளவில்லை என கவர்னர் தமிழிசை கூறினார்.புதுச்சேரி அறம் நாட்டு மருந்து கடைக்காரர்கள், பாரம்பரிய சித்தா மற்றும் மரபு சார் மருத்துவர்கள் நலச் சங்கம் சார்பில் நடந்த மாநாட்டில் கவர்னர் தமிழிசை பங்கேற்றார்.பின் நிருபர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி அரசு மருத்துவ கல்லுாரியில் தேசிய மருத்துவ கவுன்சில் சுட்டி காட்டிய குறைகள் சரிசெய்யப்பட்டு விட்டது. 5 ஆண்டுகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைத்துள்ளது. அரசு மருத்துவமனைக்கு நேரத்தோடு டாக்டர்கள் வர வேண்டும் என்பதற்காக மருத்துவமனையில் சி.சி.டி.வி., கேமரா மின்னணு வருகை பதிவேடு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில நேரங்களில் மதியம் 12:00 மணி வரை டாக்டர்கள் வருவதில்லை என புகார் கூறுகின்றனர்.நோயாளிகளை பார்ப்பதற்கு சரியான நேரத்திற்கு வர வேண்டும். தங்களுடைய தனியார் மருத்துவமனைக்கு அதிக அக்கறை காட்டுகிறார்கள், அரசு மருத்துவமனைக்கு அக்கறை காட்டுவதில்லை என்பதற்காகத்தான் சி.சி.டி.வி., மற்றும் வருகை பதிவு வைக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. தனியார் மருத்துவமனை மீது கவனம் செலுத்துவது போல் அரசு மருத்துவமனைக்கு வரும் சாமானியர்கள் மீதும் டாக்டர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே மத்திய மருத்துவ கழகம் கராறாக உள்ளது. மருத்துவ படிப்பில் தனியார் மருத்துவ கல்லுாரிகள் நமக்கு தர வேண்டிய சரியான சதவீத இடத்தை அரசுக்கு தர வேண்டும். தனியார் மருத்துவ கல்லுாரிகள் கட்டணத்தை உயர்த்த இருந்தது. அதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை.இவ்வாறு கவர்னர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us