தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தோட்டக்கலைக்கு முக்கியத்துவம்: கவர்னர் தாவர்சந்த் கெலாட்

தோட்டக்கலைக்கு முக்கியத்துவம்: கவர்னர் தாவர்சந்த் கெலாட்

தோட்டக்கலைக்கு முக்கியத்துவம்: கவர்னர் தாவர்சந்த் கெலாட்


UPDATED : ஜூலை 02, 2023 12:00 AM

ADDED : ஜூலை 02, 2023 07:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 02, 2023 12:00 AM ADDED : ஜூலை 02, 2023 07:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகல்கோட்:
தோட்டக்கலை உற்பத்தியில் நாட்டை உலக அளவில் முன்னிலைப்படுத்த கைகோர்ப்போம், என கவர்னர் தாவர்சந்த் கெலாட் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.பாகல்கோட்டில் நேற்று நடந்த தோட்டக்கலை அறிவியல் பல்கலைக்கழக 12வது பட்டமளிப்பு விழாவில், மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ்களை, கவர்னர் தாவர்சந்த் கெலாட் வழங்கினார்.பின் கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேசியதாவது:
தோட்டக்கலை துறையில் கர்நாடகா மாநிலம் முன்னிலையில் உள்ளது. தோட்டக்கலை பயிர்களின் உற்பத்தியை அதிகரித்து நாட்டிற்கும், உலகிற்கும் எடுத்து காட்ட பல வாய்ப்புகள் உள்ளன.அதிநவீன மையங்கள்
விவசாயிகளின் நலனுக்காக வேளாண்மையில் பல புதிய தொழில்நுட்பங்கள், மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்ள பல்கலைக்கழகம், பல அதிநவீன மையங்களை நிறுவியுள்ளன. விவசாயிகளுக்கு தொழில்நுட்பத்தை புகட்ட வேண்டும் என்ற நோக்கில், பல்கலை சார்பில் ஆண்டுதோறும் தோட்டக்கலை கண்காட்சிகளை நடத்தி வருவது பாராட்டுக்குரியது. இந்நாளில் மாணவர்கள் பலரும் தங்கப் பதக்கம், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளனர். நீங்கள் பெற்ற கல்வியை மற்றவர்களுக்கு கற்றுத் தர முயலுங்கள். இனி வரும் மாணவர்கள் உங்களால் ஈர்க்கப்படும் வகையில் முன்னேறுங்கள்; எழுந்திருங்கள்; விழித்தெழுங்கள்; இலக்கை அடையும் வரை நிறுத்தாமல், அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் அழைப்பு விடுத்தார்.வெற்றி பெற வாழ்த்து
அவர் காட்டிய வழியைப் பின்பற்றி, உங்கள் தொழிலில் வெற்றி பெறுங்கள். பல்கலைக்கழகக் கல்வியும் வலுவான தார்மீக அடித்தளமும் இப் பணிக்கு பெரும் உதவியாக இருக்கும். புதிய இந்தியா, ஸ்ரேஷ்ட பாரதம், ஆத்மநிர்பார் பாரத் போன்றவற்றை அடைய திறமை, மதிப்புடன் கல்வியை பிரதமர் இணைத்துள்ளார். தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்க, அனைவரும் கைகோர்க்க வேண்டும். இன்றைய உலகளவில் சுற்றுச்சூழல் சமநிலையின்மை தீவிர பிரச்னையாக உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் நமது பொறுப்பு. நீர், வனம் மற்றும் காற்று பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில், அனைத்து துறைகளிலும் நாடு வரலாறு காணாத முன்னேற்றத்தை அடைந்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் மிகவும் வலுப்பெற்றுள்ளது. இன்று நமது பொருளாதாரம் உலகின் 5வது இடத்தில் உள்ளது. அடுத்த 25 ஆண்டுகள் ஒரு சிறந்த மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான பொற்காலம். உலகின் சிறந்த நாடுகள் என்ற வரிசையில் நம் நாட்டை கொண்டுவர வேண்டியது நமது கடமையாகும்.இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us