தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவமனை கட்டடம் திறப்பு தள்ளி போகிறது

மருத்துவமனை கட்டடம் திறப்பு தள்ளி போகிறது

மருத்துவமனை கட்டடம் திறப்பு தள்ளி போகிறது


UPDATED : ஜூலை 02, 2023 12:00 AM

ADDED : ஜூலை 02, 2023 04:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 02, 2023 12:00 AM ADDED : ஜூலை 02, 2023 04:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்:
ராமநாதபுரம் நகருக்குள் புதிய அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கட்டுமான பணிகள் 95 சதவீதம் முழுமை பெற்றுள்ள நிலையில், மின் விநியோக பணி தாமதத்தால் திறப்பு விழா நாள் குறிப்பதில் மருத்துவமனை நிர்வாகம் குழப்பத்தில் உள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் 2021-22 கல்வி ஆண்டு முதல் புதிய அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு ரூ.455 கோடியில் பணிகள் நடந்தது. ராமநாதபுரம் நகருக்குள் மதுரை ரோட்டில் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ கல்லுாரிக்கான கட்டடமும், கலெக்டர் அலுவலக வளாகத்தில் மருத்துவ கல்லுாரி நிர்வாக கட்டடம் மற்றும் மாணவர் விடுதி கட்டடங்கள் கட்டப்பட்டது. கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மருத்துவக்கல்லுாரி கட்டுமான பணிகள் ஓராண்டிற்கு முன் நிறைவடைந்தது. அதே நேரம் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்ட மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கட்டடம் பணி ஜவ்வாக இழுத்தது. தற்போது 95 சதவீதம் பணிகள் முழுமை அடைந்துள்ளது.மூன்றாண்டுகளாகியும் கட்டடப் பணிகள் முழுமையடையாததால் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்குள் இடவசதி பற்றாக்குறை ஏற்படுகிறது. மருத்துவக் கல்லுாரி ஆரம்பித்து 2 ஆண்டுகளாகியும் இன்னும் கட்டடங்கள் முழுமை பெறாததால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் அடைகின்றனர்.டாக்டர் ஒருவர் கூறுகையில், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை புதிய கட்டடப் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்து விட்டது. இன்னும் மின்சார வேலைகளும், புதிய டிரான்ஸ்பார்மர் வேலைகள், மேல் தளத்திற்கான லிப்ட் வசதிகள் உள்ளிட்ட பணிகள் மீதமுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் மருத்துவமனை நிர்வாகம் பேசிக்கொண்டுதான் இருக்கிறது. கூடிய விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு புதிய கட்டடம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us