UPDATED : ஜூலை 05, 2023 12:00 AM
ADDED : ஜூலை 05, 2023 11:09 AM
மூணாறு:
இடுக்கி மாவட்டத்தில் மழை தொடர்வதால் இன்று அனைத்து பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் ஷீபாஜார்ஜ் உத்தரவிட்டார்.மாவட்டத்திற்கு இன்று பலத்த மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளதால் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்புள்ளது. அதனால் மாவட்டத்தில் அங்கன்வாடி உள்பட அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டார். தவிர மழை தொடரும்பட்சத்தில் வானிலை ஆய்வு மையம் பல்வேறு முன்னெச்சரிக்கைகளை விடுத்து வருகிறது. அதனால் மலையோர பகுதிகளில் பாதுகாப்பு கருதி இரவு 7:00 முதல் காலை 6:00 மணி வரை அத்தியாவசிய தேவைக்கு தவிர பிற பயணத்திற்கு தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டார். இந்த தடை உத்தரவு இன்று (ஜூலை 5) முதல் அமலுக்கு வருகிறது. மறு உத்தரவு வரும் வரை உத்தரவு அமலில் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
