தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கூட்டுறவு சங்கங்களுக்கான தொழில்-கல்வி இணைப்பு

கூட்டுறவு சங்கங்களுக்கான தொழில்-கல்வி இணைப்பு

கூட்டுறவு சங்கங்களுக்கான தொழில்-கல்வி இணைப்பு


UPDATED : ஜூலை 25, 2023 12:00 AM

ADDED : ஜூலை 25, 2023 08:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 25, 2023 12:00 AM ADDED : ஜூலை 25, 2023 08:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
கூட்டுறவு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான என்.சி.சி.டி (கூட்டுறவு பயிற்சிக்கான தேசிய கவுன்சில்) பல்வேறு பயிற்சிகளை நடத்துகிறது.என்.சி.சி.டி.யின் 19 பிராந்திய மற்றும் மாநில அளவிலான நிறுவனங்களில் திட்ட ஆலோசனைக் குழுவின் (பி.ஏ.சி) நிறுவன பொறிமுறை மூலம் பயிற்சித் திட்டங்களில் தொழில்துறை-கல்வி இணைப்பு கட்டமைக்கப்படுகிறது. பி.ஏ.சி., சம்பந்தப்பட்ட மாநிலத்தின்  மாநில கூட்டுறவு ஒன்றியங்கள்/கூட்டமைப்புகளின் தலைமை நிர்வாகிகள், தொழில்கள், கைத்தறி, மீன்வளம், சம்பந்தட்ட மாநிலத்தின் வேளாண்மை, தொழில் துறை வல்லுநர்கள் போன்ற உறுப்பினர்கள் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் தலைமையில் செயல்படுகிறது.மேலும், கூட்டுறவுத் தொழில் மற்றும் கல்வி கூட்டாண்மையை தொழில்/ துறை வல்லுநர்களுடன், கருத்தரங்குகள்/ வெபினார்கள், பயிற்சியாளர்களின் விரிவுரைகள், தொழில் வெளிப்பாடு வருகைகள் மற்றும் இண்டர்ன்ஷிப்கள் ஆகியவை தொடர்ந்து நடத்தப்படுகின்றன.நபார்டு வங்கியுடன் இணைந்து, சாப்ட்கோப் திட்டம் (கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு பயிற்சிக்கான நிதி உதவி திட்டம்) 2020-21 மற்றும் 2022-23 க்கு இடையில் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் (பிஏசிஎஸ்) மற்றும் பிற தொடக்க கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்துவதற்காக, முக்கியமாக விவசாயிகளான 20 ஆயிரத்து 955 பங்கேற்பாளர்களுக்கு 690 பயிற்சி திட்டங்களை நடத்தியது. இது தவிர என்.சி.சி.டி 2020-21 மற்றும் 2022-23க்கு இடையில் கிராமப்புறங்களில் உள்ள 1,61,043 விவசாயிகளுக்கு 2342 பயிற்சி/ விழிப்புணர்வு திட்டங்களை நடத்தியது.மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுதுப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா இதனைத் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us