தெளிவில்லாத வினாத்தாளால் தட்டச்சு தேர்வர்கள் பாதிப்பு
தெளிவில்லாத வினாத்தாளால் தட்டச்சு தேர்வர்கள் பாதிப்பு
UPDATED : ஆக 29, 2023 12:00 AM
ADDED : ஆக 29, 2023 10:21 AM
தேவிபட்டினம்:
அரசு தட்டச்சு தேர்வில் வழங்கப்பட்ட வினாத்தாள் தெளிவில்லாத வகையில் பிரின்ட் செய்யப் பட்டிருந்ததால் தேர்வர்கள் பாதிக்கப்பட்டனர்.தமிழகம் முழுவதும் நேற்றுமுன்தினம், நேற்றும் தட்டச்சு தேர்வு நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ், ஆங்கிலத்தில் தேர்வு நடந்தது. தேர்வர்களுக்கு கடிதம் எழுதுதல் (லெட்டர் ரைட்டிங்), ஸ்டேட்மெண்ட், ஸ்பீடு டெஸ்ட் உள்ளிட்டவைகளுக்கு தனித்தனியாக வினாத்தாள்கள் உள்ளன.வினாத்தாளில் உள்ளவற்றை குறிப்பிட்ட நேரத்திற்குள் தட்டச்சு செய்ய வேண்டும். இந்த நிலையில் நேற்றைய தேர்வின் போது வழங்கிய லெட்டர் ரைட்டிங், ஸ்டேட்மென்ட் வினாத்தாளில் எழுத்துக்கள் தெளிவில்லாத வகையில் பிரின்ட் செய்யப்பட்டிருந்ததால் தேர்வர்கள் குழப்பத்துடன் தட்டச்சு செய்துள்ளனர்.எனவே இவற்றுக்கு போனஸ் மதிப்பெண் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
