UPDATED : அக் 27, 2023 12:00 AM
ADDED : அக் 27, 2023 05:10 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம்:
பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தின் பயிர் பாதுகாப்பு துறை சார்பில் சிப்பி மற்றும் பால் காளான் வளர்ப்பு பயிற்சி கல்லூரி முதல்வர் ராஜாங்கம் தலைமையில் நடந்தது.பயிர் பாதுகாப்பு துறை தலைவர் முத்தையா, காளான் பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார். இணை பேராசிரியைகள் கல்பனா, சுகன்யா கன்னா மற்றும் நூற்புழுவியல் இணை பேராசிரியை செந்தமிழ் ஆகியோர் காளான் திசு வளர்ப்பு, வித்து உற்பத்தி, சிப்பிக்காளான், பால்காளான் வளர்ப்பு, அதில் உள்ள இடர்பாடுகள், மதிப்பு கூட்டுதல், தொழில்நுட்பம் குறித்தும் செயல் விளக்க பயிற்சி அளித்தனர். தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய செயல் அலுவலர் வசந்தன் பேசினார்.
