தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முட்டை வைத்திருந்தால் நீட் தேர்வு ரத்தாகுமா?

முட்டை வைத்திருந்தால் நீட் தேர்வு ரத்தாகுமா?

முட்டை வைத்திருந்தால் நீட் தேர்வு ரத்தாகுமா?


UPDATED : அக் 31, 2023 12:00 AM

ADDED : அக் 31, 2023 09:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2023 12:00 AM ADDED : அக் 31, 2023 09:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:
கையில் முட்டையை மந்திரவாதி போல் உதயநிதி வைத்து கொண்டு இருந்தால், நீட் தேர்வு ரத்தாகி விடுமா என, என் மண் என் மக்கள் யாத்திரையில் அமைச்சர் உதயநிதிக்கு, பா.ஜ. மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.ஈரோடு மாவட்டம், சிவகிரி அரசு மருத்துவமனை முன் நேற்று மாலை, 4:40 மணிக்கு, பா.ஜ., சார்பில், என் மண் என் மக்கள் யாத்திரை மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் துவங்கியது. குமரன் சிலை முன், 6:30 மணிக்கு யாத்திரை நிறைவு பெற்றது.சிவகிரியில் பர்னிச்சர் கடை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளி மதன்குமார்-பரிமளா கடைக்கு சென்று வியாபாரம், குடும்ப நலம் குறித்து அண்ணாமலை விசாரித்தார். பின் அப்பகுதி பள்ளி குழந்தைகள், 100 பேர் செல்வமகள் அஞ்சலக திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இதற்கு அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். பின் அவர் பேசியதாவது:கொடுமுடியில் கே.பி. சுந்தராம்பாள் நடிகையாக, பாடகியாக, 1935 கால கட்டத்திலேயே, ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றவர். தேச பிதா காந்திக்கு நெருக்கமாக இருந்தவர். இந்தியாவில் சினிமா பின்னணியில் வந்த முதல் பெண் ராஜ்யசபா உறுப்பினராவார். தமிழகத்தில் அண்ணாதுரை, அன்பழகன், கருணாநிதி பெயர் மட்டும் எல்லாவற்றுக்கும் வைக்கப்பட்டுள்ளது.கீழ்பவானி பாசனத்துக்கு மத்திய அரசு, 932 கோடி ரூபாயை சீரமைப்பு பணிக்காக கொடுத்துள்ளது. கர்நாடகா, கேரள மாநிலத்துடன் எப்போது பார்த்தாலும் நதிநீர் பிரச்னை இருந்து வருகிறது. இங்குள்ள குலவிளக்கு அம்மன், 18 கிராமங்களுக்கு அம்மனாக உள்ளது. ஆனால், கோவில் கதவில் ஈவெரா படத்தை, தி.மு.க.,வை சேர்ந்த சுப்புலட்சுமி பதித்து உள்ளார்.காமராஜர் ஆட்சியில் பாசன வசதியில், 3வது இடமாக இருந்த தமிழகம் தற்போது, 11வது இடத்தில் உள்ளது. நெசவாளர்களுக்காக, பா.ஜ., ஆர்ப்பாட்டம் நடத்திய பின் தான் இலவச வேட்டி, சேலை தயாரிக்கும் பணி வழங்கப்பட்டது. 2024ல் வெற்றி பெற்று மீண்டும் மோடி தலைமையில் பா.ஜ., ஆட்சி அமையும் போது நதிநீர் இணைப்பை செய்வார் என நம்பிக்கை உள்ளது.பொய்யை மூலதனமாக வைத்து அரசியல் செய்யும் ஒரு கட்சி, தி.மு.க., தான். உலகத்தில், 80 சதவீதம் மஞ்சள் இந்தியாவில் உற்பத்தியாகிறது. இந்தியாவில் ஈரோடு, 2வது இடத்திலும், முதல் இடத்தில் நிசாமாபாத்தும் மஞ்சள் உற்பத்தி செய்கின்றன. நிசாமாபாத்தில் மஞ்சள் வாரியம் அமைந்துள்ளது. பிராந்திய அலுவலகம் ஈரோட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.சுய ஒழுக்கம் உள்ள நேர்மையான தலைவர் பிரதமர் மோடி. பல பேருக்கு பிரதமர் ஆசை வந்து விட்டது. முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு ஜீரோ மார்க்கை விட, மைனஸ் மார்க் தான் போட வேண்டும். 1.50 கோடி தொண்டர்கள் கொண்ட தி.மு.க., 8 கோடி மக்கள் தமிழகத்தில் உள்ள நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக, 50 லட்சம் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது. உதயநிதி கையில் முட்டையை வைத்துக்கொண்டு மந்திரவாதி போல செயல்பட்டு வருகிறார். இதனால் நீட் தேர்வு ரத்தாகிவிடுமா.இவ்வாறு அவர் பேசினார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us