தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கூட்டுறவு சங்க காலியிடம் விண்ணப்பிக்க அழைப்பு

கூட்டுறவு சங்க காலியிடம் விண்ணப்பிக்க அழைப்பு

கூட்டுறவு சங்க காலியிடம் விண்ணப்பிக்க அழைப்பு


UPDATED : நவ 12, 2023 12:00 AM

ADDED : நவ 12, 2023 12:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2023 12:00 AM ADDED : நவ 12, 2023 12:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கி மற்றும் சங்கங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவு துறை சார்பில் செயல்படும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 51 எழுத்தர் பணியிடங்கள்; நகர கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கி, மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டக சாலை ஆகியவற்றில் தலா இரு உதவியாளர் பணியிடம்; பணியாளர் கூட்டுறவு கடன் சங்கத்தில் 6 உதவியாளர்; நகர கூட்டுறவு வங்கியில் 15 உதவியாளர்.வேளாண் உற்பத்தியாளர் விற்பனை சங்கத்தில் 3 உதவியாளர் என மொத்தம் 81 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும். வரும் டிச., 1 மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். டிச., 24ல் எழுத்து தேர்வு காலை 10:00 முதல் 1:00 மணி வரை நடைபெறும்.விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிக பட்ச வயது வரம்பு - ஆதி திராவிடர், பழங்குடியினர், எம்.பி.சி., - பி.சி., ஆதரவற்ற விதவை ஆகியோருக்கு வயது வரம்பில்லை. இதர வகுப்பினர் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி. கூட்டுறவு பிரிவில் பட்டப்படிப்பு உள்ளிட்டவையும் தகுதியாக ஏற்கப்படும். விண்ணப்பங்களை www.drbtiruppur.net என்ற இணைய தளத்தில் உரிய விண்ணப்பக் கட்டணம் மற்றும் இணைப்பு சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம். கூடுதல், விவரங்களுக்கு 0421 297 1184 எண்ணிலும், drbtiruppur2022@gmail.com இமெயில் முகவரியிலும் பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us