UPDATED : டிச 06, 2023 12:00 AM
ADDED : டிச 06, 2023 04:37 PM
சென்னை:
சென்னையில் நாளை(டிச.,07) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப்பணி நடப்பதால் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் டிச.,4,5,6 ஆகிய தினங்களில் ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. 4வது முறையாக விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.செங்கல்பட்டிலும் விடுமுறை
செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களுக்கு மட்டும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுகாக்களில் இன்னும் மழை நீர் வடியாத காரணத்தால் மாணவர்கள் நலன் கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூரில் மட்டும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் தாலுகாவில் வழக்கம்போல் கல்வி நிறுவனங்கள் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
